கனடாவில் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் மினிசோட்டா என்னும் மாநிலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தற்பொழுது அந்தப் பகுதிகளில் நிலவும் கடுமையான குளிருடனான காலநிலையில் இந்த சட்டவிரோத குடியேறிகள் செய்யப்பட்டுள்ளனர்.
கடுங்குளிரில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சட்ட விரோதடியேறிகளை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களை போலீசார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய சந்தேக நபர்களை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சட்டவிரோத குடியேறி கும்பலுடன் பயணம் செய்த ஒரு நபர் காணாமல் போய் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.