Home உலகம் டிக்டாக்கில் வைரலான ஒரு விபரீத சவால்

டிக்டாக்கில் வைரலான ஒரு விபரீத சவால்

by Jey

அமெரிக்கா – ஓஹியோவை சேர்ந்த 13 வயது சிறுவன் டிக்டாக்கில் வைரலான ஒரு விபரீத சவாலுக்கு, தன்னை ஈடுபடுத்தி கொண்ட போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Benadryl Challenge” எனப்படும் இந்த ட்ரெண்டில் ஆண்டிஹிஸ்டமைன் எனும் போதை மாத்திரைகளை டிக்டாக் காணொளி செய்து கொண்டே உட்கொள்ள வேண்டும்.

அந்த மாத்திரைகளை உட்கொள்ளும் போது உடலுள் ஏற்படும் மாற்றத்தையும், காணொளியில் பதிவு செய்ய வேண்டும். இதுவே இந்த ட்ரெண்டின் விதியாகும்.

ஜேக்கப் ஸ்டீவன்ஸ் என்ற அந்த சிறுவன் போதை அடைவதற்காக 12 முதல் 14 மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார், அதனால் அவரது உடலில் ஆண்டிஹிஸ்டமைனின் அளவு உச்சத்தை அடைந்துள்ளது.

இதனால் மூளையின் செயல்திறன் பாதிக்கப்பட்டு, மயக்க நிலை அடைந்துள்ளார். பின்னர் அவர் பெற்றோரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆண்டிஹிஸ்டமைன் ஒரு வகை மருந்து பொருளாகும். இதனை அளவிற்கு மீறி உட்கொள்வதால் உண்டாகும் போதைக்கு அமெரிக்க இளைஞர் அடிமையாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

related posts