எழும்பூர்-மண்டல கண் மருத்துவவியல் நிலையத்திற்கு நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்.
தமிழக சட்டசபையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்பான மானிய கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் நேற்று விவாதித்தனர்.
அவர்களுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது துறைக்கான புதிய 106 அறிவிப்புகளை வெளியிட்டார்.
* நெல்லை, தஞ்சை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தர்மபுரி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய 7 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் பொள்ளாச்சி, கடலூர், ஈரோடு, காஞ்சீபுரம், பெரம்பலூர், கும்பகோணம், தென்காசி மற்றும் கோவில்பட்டி ஆகிய 8 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் நவீன வசதிகளுடன் சிகிச்சை பெற கட்டண படுக்கைகள் அமைக்கப்படும்.
4,133 காலிப்பணியிடங்களுக்கு * சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய 3 மாவட்ட உணவு பகுப்பாய்வு ஆய்வகங்களில் நுண்ணுயிரியல் பிரிவு மேம்படுத்தப்படும்.
* தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த 4,133 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவர்.