இன்று ஐ.நா.வின் மக்கள் தொகை நிதியம் உலக மக்கள் தொகை நிலை – 2023 அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் உலகில் மக்கள் தொகை வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
உலக மக்கள் தொகை நிலை – 2023 அறிக்கையை ஐ.நா.வின் மக்கள் தொகை நிதியம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் உலகில் மக்கள் தொகை வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், மக்கள் தொகை பெருக்கம் சார்ந்த ஆய்வில் நிபுணத்துவம் பெற்ற ஐநா அதிகாரிகள், ”மக்கள் தொகையில் இந்தியா, இந்த மாதம் சீனாவை பின்னுக்குத் தள்ளும்.
எனினும், இந்த மாதத்தில் அது என்று நிகழும் என துல்லியமாகக் கூற முடியாது. ஏனெனில், மக்கள் தொகை கணக்கெடுப்பை இந்தியா கடந்த 2011-ம் ஆண்டு எடுத்தது. அதன்பிறகு 2021-ல் எடுத்திருக்க வேண்டும்.
கொரோனா காரணமாக அது தாமதமாகி வருகிறது. மக்கள் தொகை சார்ந்து இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து கிடைத்துள்ள புள்ளி விவரங்கள் பழையதாக இருப்பதால், இந்தியா எந்த நாளில் சீனாவை பின்னுக்குத்தள்ளும் என்பதை துல்லியமாகக் கணிக்க இயலாது.