கனடாவின் பொதுத்துறை நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை தொழிற்சங்கமான பொது சேவை தொழிற்சங்க ஒன்றியத்தினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதன்படி இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தொழிற்சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஒரு லட்சத்து 55,000 ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுளளனர்.
நாட்டின் 250 இடங்களில் தங்களது கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டம் நடத்தப் போவதாக தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
சம்பள அதிகரிப்பு தொடர்பிலான கோரிக்கை உள்ளிட்ட மேலும் சில கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், அரசாங்கத்தின் இயலுமைக்கு அப்பாலான கோரிக்கைகளை தொழிற்சங்கம் விடுப்பதாக அரசாங்கத் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.