Home உலகம் பணியாளர் குறைப்பில் தீவிரம் காட்டி வருகிற மெட்டா நிறுவனம்

பணியாளர் குறைப்பில் தீவிரம் காட்டி வருகிற மெட்டா நிறுவனம்

by Jey

சமீப காலங்களாக பணியாளர் குறைப்பில் தீவிரம் காட்டி வருகிறது பேஸ்புக்கின் தாய் நிறுவனம் என கூறப்படும் மெட்டா நிறுவனம்.

இதன்படி, நிறுவனத்தில் அதிக திறன் வாய்ந்த 4 ஆயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து இன்று நீக்குவது என முடிவு செய்துள்ளது.

இதன்படி, வேலை நீக்கம் பற்றி அறிவிப்புகளை வெளியிட தயாராக இருக்கும்படி நிறுவனத்தில் உள்ள மேலாளர்களுக்கு மெமோ வழியே தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.

இதனால், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் ரியாலிட்டி லேப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் இதன் தாக்கம் இருக்கும். இதன்பின், புதிய மறுசீரமைக்கப்பட்ட குழுக்கள் மற்றும் நிர்வாக நடைமுறை பற்றியும் அறிவிப்பு வெளியிடப்படும்.

தனது 18 வருட வரலாற்றில் இல்லாத வகையில், 6 மாதங்களுக்கு முன்பு கடந்த ஆண்டு நவம்பரில் 11 ஆயிரம் ஊழியர்களை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்து இருந்தது.

இதுபற்றி அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது பணியாளர்கள் முன்னிலையில் கூறும்போது, எங்களது குழுவின் அளவை குறைப்பது பற்றி நாங்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம்.

அதனால், 10 ஆயிரம் பேர் குழுவில் இருந்துசெய்யப்படலாம் என கூறினார்.

related posts