ஸ்ரீலங்கா என்ற பெயரிலுள்ள ஸ்ரீ என்ற வார்த்தையே பேரழிவு விளைவை ஏற்படுத்தியதாக விஞ்ஞான எழுத்தாளரும், வானியலாளருமான அனுர சி.பெரேரா தெரிவித்துள்ளார்.
‘சிலோன்’ என்பதிலிருந்து ‘ஸ்ரீலங்கா’ என பெயர் மாற்றம் பெற்றது முதல் ஸ்ரீ என்ற துரதிஷ்டமான சொல்லின் காரணமாகவே, கடந்த தசாப்தங்களாக நாடு முற்றிலும் அழிவை சந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க மற்றும் விஜய குமாரதுங்க ஆகியோரின் படுகொலையிலிருந்து, வங்குரோத்தான நிறுவனங்கள் வரை, ஸ்ரீ என்ற எழுத்து அல்லது வார்த்தை ஒரு பேரழிவு விளைவை ஏற்படுத்தியது.
இலங்கையின் கடைசி மன்னன் கூட ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் என்று அழைக்கப்பட்டான்.
நாடு, தலைவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அரச நிறுவனங்களின் பெயர்களுக்கு முன்னால் ஸ்ரீ என்ற சொல்லை பயன்படுத்துவது நாட்டின் வங்குரோத்து நிலைக்கு காரணமாகியுள்ளது.
எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்ததன் மூலம் 1956ஆம் ஆண்டு முதல் எமது நாடு துரதிஷ்டத்தை பெற்றிருந்தது.
அவர் வாகன இலக்கத் தகடுகளில் ஸ்ரீ என்ற சொல் அல்லது எழுத்தை சேர்த்ததன் பின்னர் நாட்டில் சிங்கள, தமிழ் சமூகங்களுக்கு இடையில் மோதலை