உலக பணக்கார நகரங்களின் பட்டியலை குளோபல் வெல்த் டிராக்கர் ஹென்லி அண்ட் பார்ட்னர் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கு 3 லட்சத்து 40 ஆயிரம் மில்லினியர்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தாண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரிய வந்துள்ளது. 2-வது இடத்தில் ஜப்பானின் டோக்கியோ நகரம் உள்ளது. இங்கு 2 லட்சத்து 90 ஆயிரத்து 300 மில்லினியர்கள் வசிக்கிறார்கள்.
3-வது இடம் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு கிடைத்துள்ளது. இங்கு 2 லட்சத்து 85 ஆயிரம் மில்லினியர்கள் வசிப்பதாக தெரியவந்துள்ளது.
இதன்போது உலக நாடுகளில் உள்ள மொத்தம் 97 நகரங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஆப்பிரிக்கா,அவுஸ்திரேலியா, ஐரோப்பியா உள்ளிட்ட நாடுகளின் நகரங்கள் இடம் பிடித்து இருக்கின்றன.