இன்று தமிழர்களிடம் இருக்கூடிய பலம் டயஸ்போறா என்று ஐபிசி தமிழ் ஊடக வலையமைப்பின் நிறுவுனர் பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சியின் சக்கர வியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,”டயஸ்போறா, போர் காரணமாக இங்கிருந்து குடிபெயர்ந்து வெளிநாட்டில் இருக்கக் கூடிய எங்களுடைய கணிசமானானோர் நல்ல நிலையில் இருக்கின்றனர். அவர்கள் தாய்மண் மீதும் இங்குள்ள மக்கள் மீதும் பற்றுடன் இருக்கின்றனர்.
உதவி செய்ய வேண்டும், ஓர் முன்னேற்றப்பாதையில் இறங்க வேண்டும். எங்களுக்கான சுயகௌரவ அமைப்பை உருவாக்க வேண்டும் என்று நிறையப் பேருக்கு ஆர்வம் இருக்கின்றது.
காரணம் ஏராளமானவர்களுக்கு நிறைய பிரச்சினைகள் நடந்திருக்கின்றது. இந்த அரசியல் தலைமைகள் எல்லாம் சேர்ந்து ஒரு ஒழுங்கான கட்டமைப்புடன் இருக்குமானால் இதற்கென்று ஓர் மத்திய சபையை உருவாக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.