Home இலங்கை நாட்டின் முக்கிய தலைப்பாக மாறியுள்ள குரங்கு ஏற்றுமதி

நாட்டின் முக்கிய தலைப்பாக மாறியுள்ள குரங்கு ஏற்றுமதி

by Jey

குரங்குகள் உயிருடன் இருக்கும் போதே அவற்றின் மூளையை எடுத்து பச்சையாக சாப்பிடுவதற்காகவே சீனாவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல தெரிவித்துள்ளார்.

நடத்தப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்யும் விவகாரம் நாட்டின் முக்கிய தலைப்பாக மாறியுள்ளது.

இருப்பினும், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி, அதிக எண்ணிக்கையிலான வன விலங்குகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான சட்ட விதிகள் எதுவும் இல்லை.

இந்த சட்டத்தின்படி, வனவிலங்குகளை விற்பனை செய்வதில் ஈடுபடக் கூடாது என்று ஒப்பந்தம் செய்துள்ளதால், பணத்திற்காக நம் நாட்டில் விலங்குகளை ஏற்றுமதி செய்ய முடியாது.

வனவிலங்குகளை ஏற்றுமதி செய்வது அன்னிய செலாவணியை கொண்டு வர உதவாது.

related posts