பீகாரின் ஷரிஃப் நகரில் அமைந்துள்ள Madrassa Azizia என்ற கல்வி நிலையத்திற்கு சொந்தமான பழமையான நூலகத்தையே வன்முறையாளர்கள் தீக்கிரையாக்கியுள்ளனர்.
தொடர்புடைய நூலகத்தில், பண்டைய கையெழுத்துப் பிரதிகள் மற்றும் அழகான கையெழுத்தால் எழுதப்பட்ட பண்டிதர்களால் கொண்டாடப்படும் இஸ்லாமிய நூல்கள் உட்பட 4,500 நூல்கள் இருந்துள்ளது.
மார்ச் 31ம் திகதி ராமர் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ஊர்வலம் மேற்கொண்ட இந்துக்களில் சிலர் தொடர்புடைய கல்வி நிலையம் முன்பு ஒன்று திரண்டு வன்முறையில் ஈடுபட்டுள்ளதுடன், 113 ஆண்டுகள் பழமையான நூலகத்தை தீக்கிரையாக்கியுள்ளனர்.
ஷரிஃப் நகரின் பல்வேறு பகுதிகளில் அன்றைய தினம் நடந்த வன்முறை சம்பவங்களில் இதுவும் ஒன்று என்றே கூறுகின்றனர். தொடர்புடைய வன்முறை சம்பவங்களில் பலர் காயமடைந்தனர் மற்றும் சில வாகனங்கள் மற்றும் கடைகள் நொறுக்கப்பட்டன.
இந்த வகுப்புவாத வன்முறை தொடர்பாக பலரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வன்முறை குழு ஒன்று நூலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து சூறையாடியதுடன், நூல்களுக்கு தீயிட்டுள்ளனர்.