2021ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளாகி, கடலில் மூழ்கிய எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் கடல் உயிரினங்களுக்கும், கடல் வளங்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பை மதிப்பிட முடியாது.
நஷ்ட ஈட்டினை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை தடுப்பதற்காக இலங்கையர் ஒருவருக்கு கப்பல் தரப்பினரிடமிருந்து 250 மில்லியன் டொலர் இலஞ்சம் வழங்கப்பட்டள்ளதாகவும், நிதி வைப்பு செய்த வங்கிக் கணக்கு இலக்கம் வரை அறிந்துள்ளதாகவும் நீதியமைச்சர் விஜயதாஸ குறிப்பிட்டுள்ளமை அவதானத்துக்குரியது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து ஒட்டுமொத்த கடல் வளத்தையும் தாக்கியுள்ளது. இந்த விடயத்தை வைத்தும் இலஞ்சம் பெறுவது முற்றிலும் வெறுக்கத்தக்கது.
இலஞ்சம் பெற்றது யார் என்பதை நாடாளுமன்றத்தின் ஊடாக நீதியமைச்சர் பகிரங்கப்படுத்த வேண்டும். எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தின் ஊடாக நஷ்ட ஈட்டினை பெறுவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் விசேட அவதானம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.