கனடாவின் பெரும்பான்மையான மக்கள் சார்ள்ஸ் மன்னரை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்தது.
நாட்டின் தலைவராக மூன்றாம் சார்ஸ் மன்னரை ஏற்றுக் கொள்வதற்கு கனடிய மக்கள் விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் ஆட்சி முறைமை நிலவிவரும் கனடாவில் பெயரளவில் நாட்டின் தலைவர் பதவி பிரித்தானிய முடிக்குரிய அரசர் அல்லது அரசியின் கீழ் காணப்படுகின்றது.
எனினும் அண்மையில் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபத் காலமானதைத் தொடர்ந்து அந்த பதவி வெற்றிடத்திற்கு மன்னர் சாள்ஸ் நியமிக்கப்பட்டார்.
மன்னர் சாள்சை நாட்டின் தலைமை பொறுப்பிற்கு அனுமதிக்க கனடியர்கள் கூடுதல் நாட்டம் காட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது.