கனடாவில் உளவள ஆலோசனைகள் உரிய முறையில் வழங்கப்படுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் உரிய முறையில் கவனம் செலுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடிய உளவள சுகாதார ஒன்றியம் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
நாட்டில் இடம் பெற்று வரும் பல்வேறு வன்முறை சம்பவங்களுக்கும் குற்ற செயல்களுக்கும் போதிய அளவு உளவள ஆலோசனைகள் வழங்கப்படாமையே காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நோய் உச்சத்தை எட்டுவதற்கு முன்னதாக உரிய சிகிச்சைகளை பெற்றுக் கொள்வது மிகவும் முக்கியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நோய் அறிகுறிகள் தென்படும் போது நோயாளர்கள் அதற்கான சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வதற்கு முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக ஒன்றாரியோ, பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பர்ட்டா பகுதிகளில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவங்கள், படுகொலைச் சம்பவங்களின் காரணமாக ஒன்றியம் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.
பாரதூரமான சம்பவங்கள் இடம் பெறுவதற்கு முன்னதாகவே உளவள ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.