Home இலங்கை பல இன்னல்களை எதிர்கொண்டுள்ள இலங்கை பெண்கள்

பல இன்னல்களை எதிர்கொண்டுள்ள இலங்கை பெண்கள்

by Jey

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல்,சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு சென்று பல இன்னல்களை எதிர்கொண்டுள்ள இலங்கை பெண்களை மனிதாபிமான அடிப்படையில் நாட்டுக்கு அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மனித கடத்தல் தரப்பினருக்கு அகப்படாமல் சட்ட வழிமுறைகளுக்கு அமைய வெளிநாடுகளுக்கு செல்லுமாறு பொதுமக்களிடம் வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.

2020 ஆம் ஆண்டு 15640 பெண்களும்,2021 ஆம் ஆண்டு 29314 பெண்களு,2023 ஆம் ஆண்டு நிறைவடைந்த மூன்று காலப்பகுதியில் 39,915 பெண்களும் வீட்டு பணிபெண்களாக மத்திய கிழக்கு உட்பட பெரும்பாலான நாடுகளுக்கு சென்றுள்ளார்கள்.

related posts