கனடாவில் இடம் பெற்று வரும் வேலை நிறுத்த போராட்டங்களினால் கடவுச்சீட்டு மற்றும் வீசா பெற்றுக் கொள்வதில் நெருக்கடி நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் பொது துறைசார் தொழிற்சங்க ஊழியர்கள் இந்த தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
பொது துறையில் பணியாற்றி வரும் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணியாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடுதல் சம்பளம் வீட்டில் இருந்து வேலை செய்யும் சந்தர்ப்பம் மற்றும் நல்ல தொழில் பாதுகாப்பு ஆகிய கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த போராட்டம் காரணமாக கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விசா பெற்றுக் கொள்வதிலும் காலதாமதங்கள் ஏற்படக் கடும் என தெரிவிக்கப்படுகிறது.
குடிவரவு விண்ணப்பங்கள் தொடர்பான திகதிகள் பிற்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கும், ஆவணங்களை ஒப்படைப்பதற்கும் அறிவிக்கப்பட்டிருந்த திகதிகளில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் இரண்டு ஆண்டு காலப்பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான குடியேறிகளை கனடா உள்வாங்க உள்ள நிலையில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் காலதாமதம் பல்வேறு வழிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.