கனடாவில் இடம்பெறும் மிகப் பெரிய தொழிற்சங்கப் போராட்டங்களில் ஒன்றாக இந்தப் போராட்டம் கருதப்படுகின்றது.
கனடாவில் இன்றும் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக பொதுத்துறை ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
ஒன்றரை லட்சம் பணியாளர்கள் இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சம்பள உயர்வு மற்றும் தொழில் உடன்படிக்கை உள்ளிட்ட சில முக்கிய காரணிகளின் அடிப்படையில் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
கடந்த ஐந்து நாட்கள் இடம்பெற்று வரும் போராட்டம் தொடர்பில் அரசாங்கம் சாதக பதில் எதனையும் வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்றைய தினம் நாட்டின் முக்கியமான இடங்களில் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
பணவீக்கத்திற்கு நிகராக சம்பளங்கள் உயர்த்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தம் காரணமாக பல்வேறு துறைகளில் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.