பஞ்சாப் மாநில சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் மூத்த அரசியல் தலைவரும், 5 முறை முதல்-மந்திரியாகவும் பதவி வகித்த பிரகாஷ் சிங் பாதல், வயது மூப்பினால் உடல்நல குறைவு காரணமாக மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்ததால் சில நாட்களுக்கு முன்னர் மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 95 வயதான மூத்த அரசியல் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் இறங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி பிரகாஷ்சிங் பாதலின் உடலுக்கு நேரில் சென்று தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்