Home இலங்கை மாணவர்களுக்கான உணவு விநியோகம் நிறுத்தம்

மாணவர்களுக்கான உணவு விநியோகம் நிறுத்தம்

by Jey

மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் பாடசாலை மாணவர்களுக்கான உணவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் (26.04.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், உணவு வழங்குநர்களுக்கு பணம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கான உணவு வழங்குநர்களுக்கு உலக வங்கி 87 கோடி ரூபா செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

நிலையியற் கட்டளைகள் 27(2) இன் கீழ் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

related posts