கனடாவில் குற்றச் செயல் பின்னணியுடையவர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் திட்டமொன்றை ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் அறிமுகம் செய்ய உள்ளது.
சுமார் இரண்டாயிரம் பேருக்கு இவ்வாறு தொழில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
பல்வேறு திட்டங்களின் ஊடாக இவ்வாறு தொழில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதகாத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திட்டத்திற்காக 12 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகவும், ஒன்பது திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்த புதிய திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.