தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் 26 வயதான இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மருத்துவரான கலாதேவி சிகிச்சை நிலையம் ஒன்றில் வேலை செய்து வந்தார். அதன் எதிரிலேயே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்.
நேற்று மதியம் நோயாளிகளை பார்த்துக் கொண்டிருந்த கலாதேவி, அறைக்கு சென்று வருவதாக செவிலியர்களிடம் கூறிவிட்டு சென்றார்.
நீண்ட நேரமாகியும் அவர் வராததால், செவிலியர்கள் சென்று பார்த்தனர்.
அப்போது, அறையை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டபடி தூக்கில் சடலமாக கலாதேவி தொங்கி கொண்டிருந்தார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு வந்து சடலத்தை கைப்பற்றிவிட்டு கலாதேவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.