இலங்கை- அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடந்தது.
இதில் முதலில் பேட் செய்த அயர்லாந்து 492 ரன்கள் எடுத்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை முதல் இன்னிங்சில் 151 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 704 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.
அதிகபட்சமாக மதுஷ்கா இரட்டை சதமடித்து 205 ரன்னில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து குசால் மெண்டிஸ் இரட்டை சதமடித்து அசத்தினார்