அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் மற்றும் களனி பல்கலைக்கழகம் ஏற்பாட்டில் மாணவ சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களான கெழும் மற்றும் டில்ஷான் ஆகியோரை உடனடியாக விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
களனி பல்கலைக்கழக பகுதியிலிருந்து இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவர்களின் உரிமைகளை பாதுகாக்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குறித்த பகுதியில் பெரும் திரளான பொலிஸார் பாதுகாப்ப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.