சென்னை அணியை ஐபிஎல் தொடரின் 37வது லீக் போட்டியில் வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ராஜஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ஓட்டங்களை குவித்தது.
இதையடுத்து 203 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
ஷிவம் துபே பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 52 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், சென்னை அணி 170 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோற்றது இதன்மூலம் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.