Home இந்தியா நோயால் தொடர்ந்து அழுத சிறுமி – அடித்து கொன்ற தாயார்

நோயால் தொடர்ந்து அழுத சிறுமி – அடித்து கொன்ற தாயார்

by Jey

இந்தியாவில் 5 வயது மகள் விடாமல் அழுது கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த தாயார் அவரை அடித்து கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் வேத் சாலையில் உள்ள படக்டவாடியை சேர்ந்தவர் அப்துல். இவரது மனைவி 35 வயதான பில்கிஸ் கமானி. இவர்களுக்கு 5 வயதில் திவ்யாங் என்ற மகள் இருந்தார்.

நோயால் பாதிக்கப்பட்டு இருந்த சிறுமி தொடர்ந்து அழுததால் கோபமடைந்த பில்கிஸ் மகளை ஒங்கி தரையில் அடித்ததோடு தொடர்ந்து தாக்கியுள்ளார்.

மாலையில், சிறுமியின் தந்தை அப்துல் வீட்டிற்கு வந்தபோது, திவ்யாங் உடல்நிலை மோசமாக இருப்பதைக் கவனித்தார்.

உடனடியாக மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்ற போது சிறுமி இறந்து விட்டதாக தெரிந்தது.

மேலும் பரிசோதனையில் சிறுமியின் உடலில் வெளிப்புற மற்றும் உள் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் பில்கிஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

related posts