Home உலகம் இந்தோனேசியாவின் துறைமுக பகுதியில் படகு விபத்து

இந்தோனேசியாவின் துறைமுக பகுதியில் படகு விபத்து

by Jey

இந்தோனேசியாவின் மேற்கு மாகாணமான ரியாவில் உள்ள இந்திரகிரி ஹிலிர் என்ற துறைமுக பகுதியில் படகு விபத்து.

துறைமுக பகுதியில் இருந்து ரியாவ் தீவின் தலைநகரான தஞ்சோங் பினாங்குக்கு பயணிகள் படகு ஒன்று புறப்பட்டது. இதில் 80-க்கும் மேற்பட்டவர்கள் சென்று கொண்டிருந்தனர். இந்த படகு புளாவ் புருங் என்ற இடத்துக்கு அருகே உள்ள கடற்பகுதியில் சென்றபோது திடீரென கடலில் கவிழ்ந்தது.

இதனால் படகில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்தனர்.
இந்த சம்பவம் குறித்து கடலோர போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் அவர்கள் மீட்பு படையினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு அவர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்த குழந்தைகள், பெண்கள் என 58 பேரை மற்றொரு படகு மூலம் மீட்டனர்.

related posts