Home இந்தியா தமிழகத்தை உலுக்கிய மீனவர்கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை

தமிழகத்தை உலுக்கிய மீனவர்கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை

by Jey

தமிழகத்தை உலுக்கிய மீனவர் பஞ்சநாதன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடலூரில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், துறைமுகம் சோனாங்குப்பம் பகுதி மீனவர்களுக்கும் இடையே கடந்த 15.5.2018 அன்று கடும் மோதல் ஏற்பட்டது.

அப்போது மீனவர்கள் கத்தி, அரிவாள், சுளுக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

இந்த மோதலில் அ.தி.மு.க. பிரமுகரும், மீனவருமான பஞ்சநாதன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 21 பேரை கைது செய்தனர்.

கடலூர் முதலாவது மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.

குற்றம்சாட்டப்பட்ட 20 நபர்களில் 10 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்ததோடு அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

related posts