Home உலகம் 13 வருடங்கள் கழிந்து அவர் எவரஸ்ட் மலையில் ஒரு வினோதமான முயற்சி

13 வருடங்கள் கழிந்து அவர் எவரஸ்ட் மலையில் ஒரு வினோதமான முயற்சி

by Jey

எவரஸ்ட் மலையில் ஏற முழங்காலுக்கு இரண்டு கால்களை இழந்த ஹரி புத்தா மாகர் என்ற நபர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

13 வருடங்கள் கழிந்து அவர் எவரஸ்ட் மலையில் ஒரு வினோதமான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பிரித்தானியாவின் புகழ்பெற்ற படைப்பிரிவான நேபாள கூர்க்கா படைப்பிரிவில் பணியாற்றி வந்த இவர், ஆப்கானிஸ்தானில் கடமையாற்றிய போது வெடி குண்டு தாக்குதலில் சிக்கி இரண்டு கால்களை இழந்தார். அப்போது அவருக்கு 30 வயது.

இந்த நிலையில் 13 வருடங்கள் கழிந்து அவர் எவரஸ்ட் மலையில் ஒரு வினோதமான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

எதிர்வரும் மே மாதம் அவர் எவரஸ்ட் சிகரத்தில் ஏறும் சவாலை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

43 வயதான முழங்காலுக்கு கீழ் இரண்டு கால்கள் இல்லாது எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் நபர் என்ற சாதனையை நிகழ்த்த அவர் தயாராகி வருகிறார்.

இது குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள ஹரி புத்த மாகர்,

நான் இரண்டு காலங்களை இழந்த போது எனது வாழ்க்கை முடிந்து விட்டது, வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலியில் இருக்க போகிறேன் என நினைத்தேன்.

எனினும் நான் வித்தியாசமாக சிந்திக்க ஆரம்பித்தேன். இரண்டு கால்களை இழந்த என்னால், உடல் ரீதியாக என்ன செய்ய முடியும் என்பதை கண்டுபிடிப்பதே எனது குறிக்கோளாக இருந்தது. என்னால் முடிந்த அனைத்தையும் முயற்சித்து பார்த்தேன்.

related posts