2023 ஆம் ஆண்டின் சந்திர கிரகணம் வெசாக் பௌர்ணமி தினம் மற்றும் மறுநாள் நிகழவுள்ளது என இலங்கை கோள்மண்டலம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திர கிரகணம் ஆசியா, தெற்காசியா, கிழக்கு ஐரோப்பா, பசுபிக்,அட்லாண்டிக் மற்றும் இந்திய பெருங்கடல் பிராந்தியங்களில் தென்படும்.
எதிர்வரும் 5 ஆம் திகதி இரவு 8.44 அளவில் ஆரம்பிக்கும் இந்த சந்திர கிரகணம் மறுநான் அதிகாலை 1.1 மணி வரை 4 மணி நேரமும் 19 வினாடிகளும் தென்படும் என இலங்கை கோள்மண்டலம் தெரிவித்துள்ளது.
சந்திரனுக்கும் சூரியனுக்கும் நடுவில் பூமி வரும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது.
சந்திரனும் சூரியனும் பூமியின் எதிர்பக்கங்களில் இருக்கும் போது முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
சூரியன் – சந்திரன் இடையிலான ஒரே நேர் கோட்டில் பூமி வருவதால் பூமியின் நிழல் சந்திரன் மீது விழுந்து மறைக்கும் நிகழ்வு சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது.