ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை ரிக்டர் அளவில் 4.1 ஆக நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் உயிர் சேதம் எதுவும் ஏற்பட வில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, ஜம்மு காஷ்மீரில் பெரும்பாலான பகுதிகள் மலைகள் சூழ்ந்த பகுதிகள் என்பதால் இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டால் மண் சரிவதற்கான வாய்ப்பும் அதிகம் இருக்கிறது.
எனவே, அப்பகுதி மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.