Home உலகம் தலைநகர் டெல் அவிவில் திரண்டுள்ள இஸ்ரேலியர்கள்

தலைநகர் டெல் அவிவில் திரண்டுள்ள இஸ்ரேலியர்கள்

by Jey

இஸ்ரேல் நாட்டு மக்கள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக வரலாறு காணாத மாபெரும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைத்து நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரமளிக்கும் நீதித்துறை மறுசீரமைப்பு மசோதாவானது பல கட்ட மக்கள் போராட்டங்களால் வெற்றிகரமாக இடைநிறுத்தப்பட்டது.

ஆனால் அதை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி நெதன்யாகுவுக்கு எதிராக 10 ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் தலைநகர் டெல் அவிவில் திரண்டுள்ளனர்.

நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைகும் வகையில் அரசு கொண்டு வரும் சட்டம் ஜனநாயகத்திற்கு எதிரானது என்று அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து 17-வது வாரமாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் அரசு நீதித்துறை மறுசீரமைப்பு மசோதாவை முழுமையாக திரும்ப பெறும் வரை இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

related posts