Home இந்தியா மாவட்டம் தோறும் நேரில் மு.க.ஸ்டாலின்

மாவட்டம் தோறும் நேரில் மு.க.ஸ்டாலின்

by Jey

கள ஆய்வில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இதன்படி கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் கடந்த 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏற்கனவே நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில் நான் ஆய்வு செய்த தகவல்களை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என அதற்கு ஏற்ப பணிகளை முடக்கி விட்டு உள்ளீர்கள்.

அதுபோன்று செய்யாமல் அனைத்து பணிகளும் திட்டமிட்டு நிறைவேற்ற வேண்டுமென மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் இந்த மாவட்டங்களில் பணிகள் நன்றாக நடைபெறவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

 

related posts