கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தப்படும் என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.
இது தொடர்பில் பேசிய சீமான், கடலுக்குள் பேனா சிலை வைப்பது தான் உங்கள் பகுத்தறிவா?
எங்கள் முன்னொர்கள் எழுதாததையா கருணாநிதி எழுதிவிட்டார்.
வங்கக் கடல் உங்கள் கடல் அல்ல, அது எங்கள் கடல், மக்களின் கடல்.
அதிகார திமிர், பணத்திமிரில் சிலை வைக்கிறார்கள்.
ஓய்வூதியம் கொடுக்க பணமில்லை என சொல்கிறார்கள், பேனா சிலை வைக்க 81 கோடி ரூபா எப்படி வந்தது என சாடியுள்ளார்.
தமிழகத்தின் முக்கிய இடத்தில் இலங்கை தமிழர்களுக்கு வீடுகள்! கட்டுமான பணியை பார்வையிட்ட ஆட்சியர்
தமிழகத்தின் சிவகாசியில் இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.
ஆனைக்குட்டம் மற்றும் குல்லூர்சந்தை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றது.
அங்கு இலங்கை தமிழர்களுக்கு கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் மற்றும் அயலகத் தமிழர் நலன் மற்றும் …