Home இலங்கை யாழ். நகரில் நடைபெற்ற மே தின வாகன ஊர்வலம்

யாழ். நகரில் நடைபெற்ற மே தின வாகன ஊர்வலம்

by Jey

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் (01.05.2023) பிரதான கட்சிகள், அரசியல்சார் தொழிற்சங்கங்கள் கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரியளவில் பேரணிகளையும் கூட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளன.

அந்த வகையில் இன்றைய தினம் (01.05.2023) வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மே தினத்தில் வாகன ஊர்வலமொன்று யாழ். நகரில் நடைபெற்றுள்ளது.

குறித்த ஊர்வலமானது இன்றைய தினம் காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலிருந்து மோட்டார் வாகன ஊர்வலம் ஆரம்பித்து யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நிறைவுபெற்றுள்ளது.

உலகம் முழுவதும் மே தினம் உழைப்பாளர்கள் உரிமைக்காகக் கொண்டாடப்படுகின்ற நிலையில், இன்றைய தினம் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி ஊர்வலம் இடம்பெற்றது.

இதன்போது, பெருமளவு பொலிஸாரும் வீதிகளிலும் போக்குவரத்து பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டிருந்த போதும் குறைந்தளவானவர்களே ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரும் இன்றைய தினம் (01.05.2023) மே தின கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

செய்தி – தம்பித்துரை பிரதீபன், கஜிந்தன், வடிவேலு சக்திவேல்

சர்வதேச தொழிலாளர் தினமான இன்று வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கட்சிகளின் ஏற்பாட்டில் மே தின கூட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பிரதேசத்தில் மாத்திரம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் மே தின கூட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, தமிழ்த் தேசிய தொழிலாளர் அடக்குமுறையினையும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வளச்சுரண்டல் நில ஆக்கிரமிப்பு வழிபாட்டுரிமை மீறலையும் நயவஞ்சக அரசியலையும் வெளிப்படுத்தும் ஊர்தி பவனியும் தொழிலாளர் எழுச்சி நிகழ்வும் சிறப்பு நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராச கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்

related posts