தமிழகத்தில் திருமண மண்டபத்தில் கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தின் மீஞ்சூரை சேர்ந்தவர் 20 வயதான சதீஷ்.
இவர் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். பகுதி நேர வேலையாக கேட்டரிங் சர்வீஸ் சென்டர் ஒன்றில் பணிக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 23ஆம் திகதி மீஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேட்டரிங் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது நிலை தடுமாறிய சதீஷ் கொதித்து கொண்டிருந்த ரசத்தில் தவறி விழுந்தார்.
இதனால் படுகாயம் அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சதீஷ் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.