ஈரான் பாதுகாப்புத்துறையின் துணை மந்திரியாக 1997 முதல் 2005 வரை பணியாற்றியவர் அலிரிசா அக்பரி.
இவரை கடந்த 2019-ம் ஆண்டு ஈரான் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
நாட்டிற்கு எதிராக செயல்பட்டதாகவும், நாட்டின் ராணுவ ரகசியங்கள், அணு ஆயுத ரகசியங்கள், முக்கிய அதிகாரிகளின் விவரங்களை எதிர் நாடுகளுக்கு ரகசியமாக தெரிவித்ததாகவும் தேசதுரோகத்தில் ஈடுபட்டதாகவும் கூறி அலிரிசா அக்பரியை ஈரான் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அலிரிசா அக்பரியை கடந்த ஜனவரி மாதம் ஈரான் அரசு தூக்கு தண்டனை நிறைவேற்றியது.
அலிரிசா அக்பரிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தனர்.