கையடக்க தொலைபேசிகள் உள்ளடங்களாக 31,382,000 தொலைபேசிகளை மக்கள் பயன்படுத்துவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கையில் சுமார் 22 மில்லியன் மக்கள் வாழும் நாட்டில் மூன்று கோடிக்கும் மேற்பட்ட தொலைபேசிகள் பயன்படுத்தப்படுவதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2022 ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் 100 பேரில் 12 பேர் நிலையான தொலைபேசி (லேண்ட்லைன் தொலைபேசி) இணைப்புகளை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 2,652,000 பேர் நிலையான தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்துவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மொத்த சனத்தொலையில், கையடக்க தொலைபேசி உள்ளிட்ட 100 பேர் பயன்படுத்தும் தொலைபேசிகளின் எண்ணிக்கை 142 எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஆண்டு (2022) டிஜிட்டல் தர வாழ்க்கைச் சுட்டெண்ணின் படி, இலங்கை 117 நாடுகளில் 89 வது இடத்தைப் பிடித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது