Home உலகம் உயிரை பணயம் வைத்து மிதந்து செல்லும் ஆசிரியர்கள்

உயிரை பணயம் வைத்து மிதந்து செல்லும் ஆசிரியர்கள்

by Jey

ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு ஆசிரியர்கள் 46 மீட்டர் ஆழமான குனார் நதியில் காற்று நிரப்பப்பட்ட டியூப்பின் உதவியுடன் உயிரை பணயம் வைத்து மிதந்து செல்லும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

குறித்த நதியினை கடக்க பாலம் இல்லாததால், காற்று நிரப்பப்பட்ட டியூப்பின் உதவியுடன் இந்த ஆசிரியர்கள் நதியை கடக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள் நங்கர்ஹர் மாகாணத்தில் அமைந்து இருக்கும் பாடசாலை ஒன்றில் 1,040 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

அதில் தொடக்க கல்வியை பயிலும் மாணவிகளும் உள்ளனர்.

இங்குள்ள பாடசாலை கட்டடங்கள் பயன்படுத்தும் நிலையில் இல்லை என்றும். மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் கிடைப்பதில்லை என்றும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

 

 

related posts