Home இந்தியா இந்தியாவின் ஏப்ரல் மாத பொருளாதார புள்ளிவிபரங்கள்

இந்தியாவின் ஏப்ரல் மாத பொருளாதார புள்ளிவிபரங்கள்

by Jey

நாட்டில் வேலையின்மை அதிகரித்திருப்பதாக ஆய்வு நிறுவனமான ‘சென்டர் பார் மானிட்டரிங் இந்தியா’வின் ஏப்ரல் மாத பொருளாதார புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் வேலையின்மை விகிதம் 7.8 சதவீதமாக இருந்தது. இது ஏப்ரல் மாதம் 8.11 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

நகர்ப்புற வேலையின்மை விகிதம் 8.51 சதவீதத்தில் இருந்து 9.81 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த அதிகரிப்பு கடந்த 4 மாதங்களில் இல்லாத கூடுதல் அளவாகும்.

அதேநேரத்தில் சற்று ஆறுதலாக, கிராமப்புற வேலையின்மை விகிதம் குறைந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 7.47 சதவீதமாக இருந்த கிராமப்புற வேலையின்மை விகிதம், ஏப்ரல் மாதம் 7.34 சதவீதமாக குறைந்திருக்கிறது.

 

related posts