கனடாவில் தொலைபேசி வழியான மோசடிகள் மற்றம் குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் ஹியா (Hiya) நிறுவனத்தினால் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
முதல் காலாண்டு பகுதியில் கனடியர்களுக்கு கிடைக்கபெற்ற தொலைபேசி அழைப்புக்களில் 6.3 வீதமானவை மோசடிகளுடன் தொடர்புடையவை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2022ம் ஆண்டு இறுதி காலாண்டு பகுதியை விடவும் மோசடி குறித்த தொலைபேசி அழைப்புக்கள் அதிகரித்துள்ளன.
அமெரிக்காவை விடவும் கனடாவில் கூடுதல் அளவில் தொலைபேசி வழி மோசடிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொருட்களை அறிமுகம் செய்தல் மற்றும் டிஜிட்டல் நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இவ்வாறு அழைப்பு எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.