சினிமா டைரக்டர் தயாரிப்பாளர், நடிகர் என பன்முக தன்மை கொண்டவர் நடிகர் மனோபலா (69).
தமிழில் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேலாக குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவர் தனது யூடியூப் சேனல் மூலம் பிரபலங்களை பேட்டியெடுத்து வந்தார்.
மனோபாலா 24 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். மனோபாலாவுக்கு கடந்த ஜனவரி மாதம் லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்.
இந்த நிலையில் அவர் கடந்த 15 நாட்களாக கல்லீரல் பிரச்சினையால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கே சிகிச்சை முடித்த அவரை டாக்டர்கள் ஓய்வில் இருக்குமாறு கூறியுள்ளனர். இந்த நிலையில் இன்றைய தினம் அவர் காலமாகிவிட்டார்.