Home உலகம் பிரேசிலில் அவசர நிலை

பிரேசிலில் அவசர நிலை

by Jey

பிரேசிலின் ரோரைமா மாகாணத்தில் சட்டவிரோதமாக தங்க சுரங்கங்கள் செயல்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, சம்பந்தப்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அங்கு சிலர் சுரங்க தொழிலில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அப்போது, அவர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் பொலிஸார் துப்பாக்கியால் சுட்டதில் 4 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

மேலும் 13பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதனால், பிரேசில் நாட்டின் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா யானோமாமி பகுதியில் அவசர நிலையை பிறப்பித்தார்.

அப்போது முதல் அங்கு சட்ட விரோத சுரங்கத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

 

 

 

related posts