Home விளையாட்டு ஸ்மார்ட்போனுக்குள் அடங்கிவிட்ட விளையாட்டுகள்

ஸ்மார்ட்போனுக்குள் அடங்கிவிட்ட விளையாட்டுகள்

by Jey

கோடைக்காலத்தில் நாம் விளையாடிய விளையாட்டுகள் இன்று ஒரு ஸ்மார்ட்போனுக்குள் அடங்கிவிட்டது.

தொழில்நுட்பம் நம்மை வசப்படுத்தும் முன்பு கோடைக்காலத்தில் நாம் விளையாடிய விளையாட்டுகள் இன்று கனவாகி போகிவிட்டது.

அந்த காலங்களில் விடுமுறை நாட்களில் பெரியவர்கள் வீட்டின் திண்ணையில் விளையாடும் விளையாட்டுகள், இன்று நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் வந்துவிட்டது.

தெருக்களில் சிறுவர், சிறுமிகள் விளையாடிய காலம் மாறி இன்று தெருக்களும் வெறுச்சோடி கிடக்கிறது.

கிராமத்து விளையாட்டுகளை பற்றி பார்ப்போம்.
தெருக்களில் மட்டுமல்ல அன்றைய படங்களில் கூட பம்பர விளையாட்டு காட்சிகள் அதிகமாக இடம்பெறும்.

பம்பரக்கட்டை மட்டும் சாட்டையை கொண்டு இந்த விளையாட்டை தொடங்க வேண்டும். இருவர் அல்லது பலர் இணைந்து இந்த விளையாட்டை விளையாடலாம்.

முதலில் கீழே ஓர் வட்டத்தை இட வேண்டும், பின் சிறுவர்கள் பம்பரத்தை சுழற்றி ஒரே நேரத்தில் கீழே விட்டு சுழற்றி விட வேண்டும்.

அதன் பின் சுழன்றுகொண்டு இருக்கும் பம்பரத்தை கையில் எடுத்து வட்டத்திற்குள் இருக்கும் பம்பரத்தை அடித்து வெளியில் எடுக்க வேண்டும்.சில சமயங்களில் பம்பரம் உடைந்துவிடும், அதனால் சிறுவர்கள் பம்பரங்களை நேர்த்தியாக தேர்வு செய்வார்கள்.

சிலருக்கு இது பொக்கிஷம் போன்றது. தமிழகத்தை தாண்டி பல மாநிலங்களில் இந்த விளையாட்டு விளையாடப்படும்.

related posts