கவர்னர் ஆர்.என்.ரவி தனியார் ஆங்கில செய்தித்தாளுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:- தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சித்தா பல்கலைக்கழக மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானிய குழு விதிகளுக்கு எதிராக சித்தா பல்கலைக்கழக மசோதா உள்ளது.
2 முறையும் பல்கலைக்கழக வேந்தராக முதல்-அமைச்சர் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளதால் மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசு எடுத்துக் கொள்வதால் மசோதாவை ஏற்க முடியாது.
பல்கலைக்கழகங்களில் அரசியல் இருக்கக்கூடாது என்பதற்காகவே கவர்னர்கள் மூலம் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 8 பல்கலைக்கழகங்கள் சார்ந்த மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.