கனடிய வருமான முகவர் நிறுவன தொழிலாளர்களது போராட்டம் கைவிடப்பட்டது.
கனடிய வருமான முகவர் நிறுவனத்தைச் சேர்ந்த 35000 பணியாளர்கள், பொதுத்துறை ஊழியர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சம்பள அதிகரிப்பு, டிஜிட்டல் வழி பணி, தொழிற்பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் இரு தரப்பிற்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று முதல் போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது