Home இலங்கை ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக போராடிய அப்பாவிகள் கைது

ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக போராடிய அப்பாவிகள் கைது

by Jey

பலாலி பொலிஸ் நிலையத்தில் ஜனநாயக ரீதியில் போராடிய அப்பாவிகள் ஒரு சிலரை கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக சட்டத்தரணி சுகாஷ் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கைது செய்தவர்களை விடுவிப்பதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றோம்.

பொலிஸ் பொறுப்பதிகாரியை நாங்கள் சந்திக்க வந்த வேளை எங்களை காக்க வைத்துவிட்டு திருப்பி அனுப்பியுள்ளார்கள்.

பொலிஸாருடைய அராஜகமும் அடக்குமுறையும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஆனால் இவற்றுக்கு நாங்கள் பணியப்போவதில்லை.

ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்தும் குரல் கொடுத்துக்கொண்டே இருப்போம்.

பலாலியில் இராணுவ பாதுகாப்புக்குள், இராணுவ முகாம்களை தாண்டி பொலிஸ் நிலையத்தை அமைத்திருக்கின்றார்கள்.

இந்த பொலிஸ் நிலையத்திற்கு வருவதற்கு கூட நாங்கள் இராணுவத்தினூடாகவே வரவேண்டி இருக்கின்றது.

இதுவும் இலங்கையில் இராணுவ ஆட்சி நடைபெறுகின்றது என்பதை வெளிப்படுத்தும் முகமாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

எந்தவிதமான ஜனநாயகத்திற்கு எதிரான விடயத்திற்கும், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் பொதுமக்களது வாழ்வாதாரங்களை அழிக்கின்ற செயற்பாடுகளுக்கு எதிராகவும் தொடர்ந்தும் குரல் கொடுப்போம் என தெரிவித்துள்ளார்.

related posts