தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.
69 வயதாகும் இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு திரைபிரலங்கள், அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள் என பலரும் நேரிலும் சமூக வலைத்தளத்தின் வாயிலாகவும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.