பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் மூடிசூட்டு நிகழ்வில் பங்கேற்க கனடியர்களுக்கு பயண அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவுவதாக இந்த அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 6ம் திகதி சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு நிகழ்வு வெஸ்மினிஸ்டர் ஆபே தேவாலயத்தில் நடைபெறவுள்ளது.
மக்கள் மீது வாகனத்தை மோதச் செய்தல், குண்டு வெடிப்பு மற்றும் கத்தி குத்து தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கனடியர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாடசாலைகள், வழிபாட்டுத் தளங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்குச் செல்லும்போது கனடியர்கள் கூடுதல் விழிப்புடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.