இலங்கைக்கு உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது அவசர அச்சுறுத்தல் என சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், இலங்கையில் அதிகரித்து வரும் போராட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு (PAT) பதிலாக மாற்றுச் சட்டத்தை முன்மொழிய வேண்டும் எனவும் கோரியுள்ளது.
மேலும், உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA) இலங்கையில் மனித உரிமைகளுக்கு அவசர அச்சுறுத்தலாக உள்ளது என்று ஆசியாவுக்கான சட்டப் பணிப்பாளர் கரோலின் நேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் அமைதியான முறையில் போராடுவதற்கான மனித உரிமைகளைப் பயன்படுத்தும் மக்களுக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுக்களை விதிக்க இச்சட்டம் பயன்படுத்தலாம்.
மறுவடிவம் பெறும் இந்த சட்டமூலமானது முந்தைய கொடூரமான சட்டத்தை விடவும் ஆபத்தானது என்பதற்கு இலங்கை மக்களின் கூச்சல் சான்றளிக்கின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.