ஒன்றாரியோ மாகாணத்தில் குரோதப் பேச்சுக்களை தடுக்க விசேட திட்டமொன்று வகுக்கப்படுவதாக அரசாங்கம அறிவித்துள்ளது.
இதன்படி, குறித்த பிரச்சினையை தீர்க்க பெருந்தொகை நிதியை அரசாங்கம் முதலீடு செய்யவுள்ளது.
மத வழிபாட்டுத்தலங்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்பட உள்ளது.
ஒன்றாரியோ அரசாங்கத்தினால் இந்த நிதி உதவி வழங்கப்பட உள்ளது.
சிறுபான்மை இன, மத சமூகங்களுக்கு எதிரான குரோதப் பேச்சுக்கள் அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது..
சிறுபான்மை சமூகங்களின் மீதான வெறுப்புணர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு மாகாண அரசாங்கம் நிதியீட்டம் செய்யத் திட்டமிட்டுள்ளது.